டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 210 தங்க பதக்கங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க பதக்கத்தின் மதிப்பு 1,680 கிராம் எனவும் ரூ.45 லட்சம் மதிப்பு என அதிகாரிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.