Alchemy which have been founded by Siththars was the best ever Scientific research. The metals, salts, arsenic's, roots, leaves, seeds, bark of a tree, flowers, pearl, coral and many sea materials, and things got from animals such as musk-deer, civet, urine and dung were analyzed by the Siththars and sorted out their qualities.
They had even established the healing capacities of those materials. They found the combinations of materials for a specific medicine and also indexed the medicines for respective diseases. They categorized the intake of medicines in various forms such as inhaling, drinking, coating and so on.
Like now, there was no laboratories in those days. It was quite surprise that Siththars who had lived in forests, mountains and caves had done many researches and found medicinal qualities of each material. Siththars also did research on astronomy, astrology, medicine and concluded their results.
Though Siththars lived thousands of years ago, their practical solutions applicable even to the current era. They had dedicated their researches to the welfare of the Humankind. Hence we could call Siththars as the World’s first scientists and foregoer of Science.
ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.
இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.
இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும் , மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும்.
இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.
ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர்.
ஆகவே,சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றால் அது மிகைப் படுத்தல் அல்லவே.
தன்னை அறிந்து தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த மகான்கள் சித்தர்கள். வாழ்க சித்தர்கள் ஓங்குக சித்தர்கள் புகழ்.